முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயரும்?

சனிக்கிழமை, 14 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 15 - சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலின் தரத்தை உயர்த்துவதற்கு அதன் விலையை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்க வேண்டும் என்று செளமித்திர செளதுரி குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

மத்திய திட்டக்குழுவின்   முன்னாள் உறுப்பினரான   செளமித்திர செளதுரி அளித்சுள்ள பரிந்துரையில்  நாடு முழுவதும் யூரோ-4 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2017-ம் ஆண்டுக்குள்ளும்  யூரோ-5 கட்டுப்பாடுகள் 2020-ம் ஆண்டுக்குள்ளும்  அமல்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும்.

இதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரூ.80 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.   2014 முதல் 2022 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 75 காசுகள் உயர்த்துவதன் மூலம் அதற்கான நிதியைத் திரட்ட வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு டெல்லி, மும்பை, சென்னை, ஆமதாபாத், லக்னோ  உள்ளிட்ட 26 நகரங்கள் பிஎஸ்4 பெட்ரோல், டீசல் வகைகளைப் பயன்படுத்தி வருகின்றன. 

 மீதமுள்ள பகுதிகளில் பிஎஸ்3 வகைகள்  பயன்படுத்தப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்குள் தென் மாநிலங்கள் முழுவதும் பிஎஸ்4 வகை பெட்ரோல் டீசல் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மூலம் வெளியாகும் நச்சுப் புகையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் மாசைக் கட்டுப்படுத்தி அதன் தரத்தை உயர்த்த 2020-ம் ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்க  வேண்டி யது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!