முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ஷூ

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ-வான ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

கழிவுகளை வெளியேற்ற...

கழிவு நீக்க முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

புகைப்பதால் மரணம்

195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா  2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.

தமிழில் ஸ்கைப்

குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வெள்ளை காண்டா மிருகத்துக்கு ஆயுத பாதுகாப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது.ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள். வெள்ளை காண்டாமிருகங்கள் வேட்டை மற்றும் வாழ்விட இழப்பின் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.நாஜின் என்று பெயரிடப்பட்டுள்ள வெள்ளை பெண் காண்டாமிருகம் செக் நாட்டில் ஒரு வன விலங்கு பூங்காவில் பிறந்தது. பத்தாண்டு காலத்துக்குப் பிறகு கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா வன விலங்கு பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு அதற்கு பலத்த ஆயுத பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago