முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனி சிகரத்தில் காஸ்ட்லியான ஹோட்டல்

கோடை வாசஸ்தலங்களில் விடுமுறைக்கு செல்பவர்கள் சற்று தள்ளி அமைந்திருக்கும் அமைதியான இடங்களை நாடுவது வழக்கம். ஆனால் ரொம்பவே தள்ளி, பனி சிகரத்தின் மலை உச்சியில் மிகவும் காஸ்ட்லியான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள தெனாலி தேசிய பூங்காவில்தான் அந்த ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு விமானத்தில் செல்வதை தவிர வேறு மார்க்கம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி அதாவது 1829 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. பருவ காலங்களில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை பார்ப்பதற்கே காண கண் கோடி வேண்டும். அதற்கு ஈடாக இந்த ஹோட்டலுக்கு செலவழிக்கவும் காசு கோடி வேண்டும். ஜோடியாக தங்குபவர்களுக்கு 3 இரவுகளுக்கு வெறும் ரூ.26 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பனி சறுக்கு, மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுது போக்கு  அம்சங்களும் பகலில் உள்ளன. இரவில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை காண்பதே இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பரவச அனுபவமாகும். 

பெண்கள் பொது இடத்தில் தொப்பி அணிந்தால் அபராதம்

ஆடை உலகில் இன்றைக்கு ஆண்கள் பெண்களை கடந்து அத்துறை எங்கோ சென்று விட்டது. ஆனால் கடந்த காலங்களில் பெண்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் 1500 களில் அரசி முதலாம் எலிசபெத் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் எலிசபெத் தொப்பி அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் விதவிதமாக தொப்பிகளை அணிவதுடன், அவற்றை சேகரிக்கவும் செய்தார். இதன் காரணமாக அவரது ஆட்சியின் போது வார இறுதி நாட்களில் பொது இடங்களில் பெண்கள் தொப்பி அணிய தடை விதிக்கப்பட்டது. தவறி அவ்வாறு யாராவது தொப்பி அணிந்து பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

புது முயற்சி

பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறை.

டவு சொற்கள்

இணையதள ஹேக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு கடவுச்சொற்களை கணினிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிகமான பயனர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் 123456 என்பது கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago