முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எறும்புகளின் மொத்த எடை மனிதனை விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும். 

பணக்கார நகரம்

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை திகழ்வதாகவும், இங்கு 46 ஆயிரம் மில்லியனர்களும், 28 பில்லியனர்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ளோரின் மொத்த சொத்து மதிப்பு 56 லட்சம் கோடி ரூபாயாம். இதை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு பணக்கார நகரங்களாக உள்ளன. 7-வது இடத்தில் சென்னை உள்ளது.

தெரியாம போச்சே

1998-ம் ஆண்டு முதல் ஆப்பிள் கருவிகளில் ‘ஐ’ முன்வைக்கப்பட்டுள்ளது.‘ஐ’ -ன் அர்த்தம் என்ன என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் அர்த்தம் இண்டர்நெட் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இதற்கு தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (Inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவையும் அர்த்தமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறதி நோய் நல்லது

தற்போது அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து மூலம் பல் சம்பத்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் பற்களை புதிதாக முளைக்க செய்ய இயலும் என்றும் பற்களுக்கு இடையே உள்ள துவாரங்களை சரி செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பற்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களில் பற்சிதைவு சரியாகி பற்கள் முன்பு இருந்தது போல் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago