முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

துரியன், பலாப்பழங்களை கொண்டு போனை சார்ஜ் செய்யலாம்

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், துரியன் பழக் கழிவுகளை கொண்டு சூப்பர் மின்தேக்கிகளாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் ஆற்றலை சீராக வெளியேற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பரிசோதனை முறையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் போன், மடிக்கணினி மற்றும் பிற அன்றாட கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய முடியும். துரியன் மற்றும் பலாப்பழங்களிலிருந்து வரும் கழிவுகளை “விரைவான மின்சார சார்ஜ் செய்ய” energy stores-களாக மாற்றலாம். துரியன் மற்றும் பலாப்பழங்கள் இந்த ஆய்வுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவற்றின் போரோசிட்டி மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக அவை  தேர்வு செய்யப்பட்டன. துரியன் மற்றும் பலா-பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பர்-மின்தேக்கிகள் தற்போது பயன்படுத்தப்படும் பொருட்களை விட கணிசமாக சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கிராபெனின் அடிப்படையிலான பொருட்களுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கலாம். மேலும் இந்த முறை, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு உதவுவதோடு, புதைபடிவ எரிபொருளை ஆற்றலாக மாற்றுவதற்கான தற்போதைய முறைகளுக்கு ஒரு மாற்றையும் வழங்க முடியும்.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

டைட்டானிக் கப்பல்

1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும்  எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.

உண்மை சீட்டா அழிந்தது யந்திர சீட்டா உயிர் பெற்றது

நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது.  தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உப்பு கரிக்காத கடல்

கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி  கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago