முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம் எங்கு விளைகிறது தெரியுமா?

ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைதான் பெருங்காய இறக்குமதிக்கு இந்தியா நம்பியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக பெருங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடாத பல இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு, பெருங்காய வாசனை அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது."உணவுகளின் கடவுள்" என்று பாரசீக மக்கள் இதனை ஒருகாலத்தில் குறிப்பிட்டாலும், தற்போது இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சில நாடுகளில் பெருங்காயம் மருத்துவ காரணங்களுக்காகவும், பூச்சிக்கொள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலகில் 40 சதவீத பெருங்காயம், இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் இருந்து கிபி 600ல் பெருங்காயம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்  என்கின்றனர். இந்திய தட்ப வெப்பநிலை பெருங்காய விளைச்சலுக்கு ஏற்றதில்லை.

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதிசய உடல்

மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.

மருத்துவத்தில் புதிது

உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. HUNOVA என்ற இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிடுமாம்.

தேசிய கீதம்

கடும் உழைப்புக்கு பிரபலமான நாடு ஜப்பான். உலகின் பழமையான தேசிய கீதத்தை கொண்ட நாடும் அதுதான். உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதத்தை கொண்ட நாடும் ஜப்பான்தான். அதன் தேசிய கீதத்தில் இருப்பது ஐந்தே வரிகள், வெறும் 31 எழுத்துக்கள். 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago