நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை நிறைவேற்றிட ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் 260-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன:கண்காணிப்பு அலுவலர் சோ.மதுமதி , கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      நாமக்கல்
2

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு இன்று (03.03.2017) நடைபெற்றது. இந்த ஆய்வின்போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) ஃ உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி , நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் எடுக்கப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு அலமேடு பகுதியில் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டவலவு கோட்டமேடு பகுதியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி)  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி  சாலையின் ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சேலூர் ஊராட்சிக்குட்பட்ட சாணார்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் தொட்டி மற்றும் குழாய் விஸ்தரிப்பு பணிகளையும், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி)  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி)  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி  தலைமையில், கலெக்டர் மு.ஆசியா மரியம்  முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி)  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி  பேசும்போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டம், வறட்சியான மாவட்டம், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கடை கோடி கிராம மக்களுக்கும் குடிநீர் தேவையை நிறைவேற்றிட பல்வேறு நிதியுதவிகளின் கீழ் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் ஏறத்தாழ 260க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக 14-வது நிதிக்குழு மானியத்திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, இடைநிரவல் பொது நிதி, தாய் (சேமிப்பு) த்திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவி போன்ற பல்வேறு நிதியுதவிகளைப் பயன்படுத்தி இந்த ஆண்டு (2016-17) மேற்குறிப்பிட்டுள்ளவாறு 260-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்நிதியினைக் கொண்டு, மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய குடிநீர்த்திட்டப்பணிகளை மட்டுமே இந்நிதியினை பயன்படுத்தி, குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றிட வேண்டும். இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். வறட்சியான இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அந்தந்த அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நீர் ஆதாரங்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்திடவும், மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி)  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி  தெரிவித்தார்.     இந்த தல ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக நாமக்கல் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சந்தானம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் மா.இராஜசேகரன், இரா.கீர்த்தி பிரியதர்சினி, பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் இரா.ஜெகாதீஸ்வரி உட்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: