திருப்பூர் மாநகராசிக்குட்பட்ட38,மற்றும் 56 வார்டுகளில் புதிய பூங்கா சு.குணசேரகன் எம்.எல்.ஏ தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      திருப்பூர்
Adikal naduvila copy

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேரன்  தலைமையில் மாநகராசிக்குட்பட்ட38,மற்றும் 56 வார்டுகளில் புதிய பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமிபூஜை விழாவில் சட்டமன்ற  உறுப்பினர்தெரிவித்ததாவது.

பூமி பூஜை பணிகள்

நமது மாநகராட்சிகுட்பட்ட 38,மற்றும் 56 வார்டுகளில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப் பட்டு விரைவில் பணிகள் நிறைவு பெற்றவுடன் மக்களின் பயன் பாட்டிற்கு நடை முறை படுத்தப் பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் அம்ரூட் (ஹஆசுருகூ )  திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படுகிறது.

லேஅவுட் விரிவு பகுதியில்

38வது வார்டு பூங்காவானது 56 சென்ட் இடத்தில் ரூ.45.70 லட்சம் மதிப்பீட்டில் கே.எஸ் கார்டன் பகுதியிலும் 56 வது வார்டு பூங்கா 36 சென்ட் இடத்தில் ரூ.61.20 லட்சம் மதிப்பீட்டில் நாராயணசாமி லேஅவுட் விரிவு பகுதியிலும் அமைகிறது. இப்பூங்காவில் பொழுது போக்கு அம்சங்களான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, உட்காரும் வசதி,கழிப்பிட வசதி, புல் வெளிகள், இது போன்று பல்வேறு வசதிகளுடன் இப் பூங்கா அமைய உள்ளது. என தெரிவித்தார்.

 இவ்விழாவில்  மூன்று மற்றும் நான்கு மண்டலங்களின் உதவி ஆணையர்கள் எஸ்.ஏ.சபியுல்லா, சி.கண்ணன், இளம்பொறியாளர்கள், வே.சந்திரசேகரன்,ஆர்.கௌரி சுந்தரன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து