செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      வேலூர்
chengam photo 1

செங்கம் அடுத்த செ.நாச்சி;ப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் சுபாஷ் மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் தனாபல இளநிலை வேலைவாய்பு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுரி முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்று பேசினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இதில் சிறப்பு கருத்தாளர்களாக சென்னை வேலை வாய்பு மற்றும் பயிற்சிதுறை மண்டல இணை இயக்குநர் லதா மாவட்ட வேலை வாய்பு அலுவலர் விஜியா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர் அப்போது இன்று நீங்கள் அரைமணி நேரம் செலவு செய்தீர்களானால் அது மீதி உங்கள் ஆயுள் முழுக்க பிரகாசமாக இருக்க உதவும் அழகான ஆறு பசுமையான நெர்பயிர்கள் என இயற்கை சூழலில் இக்கல்ல}ரி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் 2லட்சத்து 92ஆயிரம் பேர் வேலை வாய்பு அல}வலகத்தில் பதிவுசெய்துள்ளனர்

இதில் 14ஆயிரத்தி 982பேர் டிப்ளமோ படித்தவர்களாவார்கள் அரசு வேலை தனியார் நிருவன வேலை சுயதொழில் தொடங்குதல் வெளிநாட்டு வேலைவாய்பு அதற்கான பயிற்சிகள் என அனைத்தையும் என்சிஎஸ் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் பட்டயப்படிப்பு முடித்ததும் இக்கல்லுரி மாணவர்கள் பயன்பெரும்வகையில் சிறப்பு பதிவு முகாம் நடத்தித் தரப்படும் எல்லாவற்றிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நேற்கானல் உள்ளிட்ட தேர்வுகளை சிறப்பாக செய்து உரிய வேலைவாய்புகளை பெறவேண்டும் வீட்டில் பெற்றோர்களுக்கு உறுதுனையாக இருக்கவேண்டும் மதிப்பெண் மட்டுமே மதிப்பு தந்துவிடாது நல்ல பண்புகள் இருக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட வேலைவாய்பு அலுவலக ஒருங்கினைப்பாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து