நெல்லை போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு கண்காணிக்கும் கேமரா

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      தூத்துக்குடி
nellai body camera fitted in traffic inspector like kerala

கேரளா மாநிலத்தை போல் நெல்லையில் காவல்துறை  போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு கண்காணிக்கும் கேமராக்கள் வழங்கப்பட்டன.

கண்காணிக்கும் கேமராக்கள்

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு 16ஜிபி மெமரி கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது… பணியின் போது காவலர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்பொதுமக்கள் காவலர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்  சாலைகளில் வாகனங்கள் விதிமுறை மீறுகிறதா என்பதை கண்டறிய இந்த சேவையை தமிழக காவல்துறை செய்துள்ளது இந்த கேமரா காவல்துறையினர் சட்டை காலரில் அணியும் வசதியுடையது ரூ.1லட்சம் மதிப்புள்ள இந்த கேமராவில் அதிக திறன் உடைய மெமரி உடையது  போலீஸ் கண்ட்ரோல் ரூம் கண்காணிக்கும் எனவும் இதனால் பல அசம்பாவிதங்கள் குறையவாய்ப்புகள் உள்ளது. இந்த கேமரா நிலை மாவட்டத்தில் முதன்முறையாக  நெல்லை ,மாநகர போக்குவரத்து ஆய்வாளர் சாது சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.தற்போது இந்த கேமரா மூலம் வாகனஓட்டிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் போது இந்த கேமரா அப்படியே படம்பிடித்து கொள்ளும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து