முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழடியில் மேலும் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை -சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வில் மேலும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அங்கு அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் இரண்டு கட்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான நகர வீடுகள், மண் பாண்ட ஓடுகள், கலை நயமிக்க பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்தன.
பின்னர் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்புக் காசுகள், தங்கப் பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன. இந்நிலையில் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி பூமி பூஜையுடன் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதில் இதுவரை 13 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில், மண் பானைகள், கலை நயமிக்க மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் தற்போது கிடைத்துள்ளன. இப்பணியில், தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து