ரெயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      திண்டுக்கல்
6 didugal railway

திண்டுக்கல்,- திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளுக்கு ரெயில்வே போலீசார் மறுவாழ்வு அளித்தனர்.
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினசரி ஏராளமான ரெயில்கள் வந்து செல்கிறது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்கும் இங்கு ஏராளமான மனநோயாளிகள், பிச்சைக்காரர்கள் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தனர். இதில் பெண்களும் அடங்குவர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும், அப்பகுதி மக்களிடமும் அவர்கள் பணம் வாங்கி அதே இடத்தில் சுற்றி வந்ததால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்ட சமூகநலத்துறை அல்லது ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற வறிய நிலையில் சுற்றித் திரிந்தவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து, குளிக்கவைத்து சுத்தப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு மாற்று ஆடைகள் வழங்கி உணவு வழங்கினர். மேலும் பாரதிபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து கொடைரோடு, பழனி ரயில் நிலையங்களிலும் சுற்றித் திரியும் வறியவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள் மற்றும் வறியவர்களுக்கு மறுவாழ்வு அளித்த ரெயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரியும் வறியவர்களையும் மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகநலத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து