அத்திவரதர் வைபவம்: 42-வது நாள்; அலைமோதும் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
athivarathar darshan 2019 08 07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் வைபவம் இன்று 42-வது நாளை எட்டியுள்ள நிலையில் விடுமுறை தினமான இன்று கூட்டம் அலைமோதியது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் நடை பெற்று வருகிறது. 42-ம் நாள் உற்சவமான இன்று. அத்திவரதரை தரிசிப்பதற்கு விடுமுறை தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சனிக்கிழமையான நேற்று சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசை யில் காத்து நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். இன்றும் அதே அளவுக்கு கூட்டம் அலைமோதியது. அத்திவரதர் வைபவம் ஜூலை 17-ம் தேதியும், தரிசனம் ஜூலை 16-ம் தேதியும் முடிவடைய இருப்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதைத் தொடர்ந்து தற்போதுள்ள வரிசையை தாண்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து