முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்டம்: உத்தவ் தாக்கரே ஆதரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை - சரத்பவார் வேதனை

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : உத்தவ் தாக்கரே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அது சிவசேனாவின் தனிப்பட்ட கருத்து என கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்து தஞ்சம் அடைந்துள்ள இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது. 

அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இதேபோல்  மராட்டிய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் முதல்-மந்திரி  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

குடியுரிமை திருத்த  சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதுபோலவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் வேறானது. குடியுரிமைச் திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது.  அதனை மராட்டியத்தில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை பட வேண்டாம். அதேசமயம் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது எனக் கூறினார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தெரிவித்தள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குடியுரிமை  திருத்த  சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது தேசியவாத காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து