முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் குற்றச்சாட்டு: சீன முன்னாள் நிதி அமைச்சருக்கு மரண தண்டனை

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
China s-ex-finance-minister

சீனாவின் முன்னாள் நிதி அமைச்சருக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

சீனாவின் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியாக பதவி வகித்தவர் பூ ஜெங்குவா. அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புரிந்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி சீன டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், 

ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சன் நகரில் அமைந்த மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவர் தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவோ அல்லது தனது உறவினர்கள் வழியாகவோ, வர்த்தக நடைமுறைகள், சட்டப்பூர்வ வழக்குகள் ஆகியவற்றில் மற்றவர்கள் பலனடையும் வகையில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களை செய்து முடிப்பதற்காக சட்டவிரோத வகையில் நடந்து உள்ளார். 

இதன்படி, ரூ. 58.83 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களாக முறைகேடாக பெற்றுள்ளார். இதனை கோர்ட்டில் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டாக முன் வைத்து உள்ளனர். இதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து