முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை

திங்கட்கிழமை, 27 மே 2024      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக அதே ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.  பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா இந்த வழக்கை தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கான மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ராகுல் காந்தி மும்முரமாக இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் ஆஜராவதில் அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீதான விசாரணை வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி சுபம் வர்மா தெரிவித்துள்ளார்.  முன்னதாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து