ஒருவர் பேசும் போது குரலின் ஒலியை வைத்து பேசுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறிவிட முடியும். ஆனால் ஒருவர் பேசிய மொழியை வைத்து இதை பேசியவர் ஆணா, பெண்ணா எனக் கூற முடியுமா.. ஆனால் அப்படி ஒரு விநோதமான இடம் நைஜிரீயாவில் உள்ளது. இங்குள்ள சிறுவர்களும் சிறுமிகளும் ஒரே இடத்தில் வளர்ந்தாலும் இரு வேறு பாஷையையே பேசுகின்றனர். நைஜிரீயாவில் உள்ள உபாங் என்ற கிராமம் தான் அந்த அதிசய மொழி பேசும் கிராமம். எனவே சொற்களை கொண்டே இதை பேசியது ஆணா, பெண்ணா என்பதை சொல்லிவிடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உதாரணமாக தண்ணீரை ஆண்கள் பாமுயி என்றால் பெண்கள் அமு என்கின்றனர். இந்த மரபு எப்போதிலிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியவில்லை. எனவே ஆண்களின் முன்னால் பெண்கள் தைரியமாக ரகசியங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்... மாறி வரும் காலச்சூழலில் ஆங்கில கலப்பால் உபாங் மொழி அழியும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்..
![]() 3 days 18 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது. அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..
ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..
கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அதுதான் அன்றைய நாளில் உலகின் மிக நீளமான பேருந்து சேவையாகவும் காணப்பட்டது. 1957 இல் தொடங்கப்பட்ட அந்த பேருந்து சேவைக்கு "ஆல்பர்ட்" என்றும் பெயரிடப்பட்டது. இந்த பேருந்தானது இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா ஆகிய 11 நாடுகள் வழியாக 32,669 கி.மீ தூரம் பயணம் செய்து லண்டனிலிருந்து கொல்கத்தாவை அடையும் வகையில் இயக்கப்பட்டது. அப்போது பயணக் கட்டணம் ரூ.8 ஆயிரம். 1976 வரை இந்த சேவை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவையும் ஐரோப்பியாவை இணைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பேருந்து சேவை ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே...
சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர் மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 1 week ago |
![]() 1 month 3 weeks ago |
![]() 2 months 19 hours ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 4 weeks ago |
பொரி உப்புமா
3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்
5 days 15 hours ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு
1 week 5 days ago |
தக்காளி சட்னி
2 weeks 2 days ago |