முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் வாலிபால் லீக் போட்டி சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுகம்

புதன்கிழமை, 25 மே 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே.- 25 - ஐ.வி.எல். எனப்படும் இந்தியன் வாலிபால் லீக் போட்டிக்கான சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுகம் சென்னையில் நடைபெற்றது. ஐ.பி.எல்.  கிரிக்கெட் போட்டி போல் இந்திய வாலிபால் சம்மேளனம் சார்பில் இந்தியன் வாலிபால் லீக் (ஐ.வி.எல்) போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் சென்னை ஸ்பைக்கர்ஸ், ஏனம் டைகர்ஸ், ஐதராபாத் சார்ஜர்ஸ், கர்நாடகா புல்ஸ், கேரளா கில்லர்ஸ், மராத்தா வாரியர்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளை அந்தந்த நகரத்தை சேர்ந்தவர்கள் இந்திய வாலிபால் சங்கத்தின் அனுமதியுடன் நிர்வகிக்கிறார்கள்.
இந்த போட்டி லீக் அடிப்படையில் நடைபெறுகிறது. இதன் முதல் சுற்று போட்டி பெங்களூரில் வருகிற 29​ந் தேதி முதல் ஜூன் 2​ந் தேதி வரையும், 2​வது சுற்று போட்டி சென்னையில் ஜூன் 4​ந் தேதி முதல் 8​ந் தேதி வரையும், 3​வது சுற்று போட்டி ஏனத்தில் (புதுச்சேரி) ஜூன் 12​ந் தேதி முதல் 16​ந் தேதி வரையும், 4​வது மற்றும் கடைசி சுற்று போட்டி ஐதராபாத்தில் ஜூன் 20​ந் தேதி முதல் 24​ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் அணியை கால்ஸ் குழுமம் நிர்வகித்து வருகிறது. சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
2010​ம் ஆண்டுக்கான இந்திய அழகி மானஷ்வி தலைமையில் நடந்த பேஷன் ஷோவுக்கு நடுவில் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். முன்னதாக அணியின் டி ஷர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகப்படுத்தினார். அதனை சென்னை ஸ்பைக்கர்ஸ் கேப்டன் நடராஜன் பெற்றுக் கொண்டார்.
சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுக விழாவில் அரசு முதன்மை செயலாளரும், உப்பு கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான பி.டபிள்யூ.சி.டேவிதார், இந்திய வாலிபால் சம்மேளன பொதுச் செயலாளர் கே.முருகன், அணியின் உரிமையாளரும், கால்ஸ் குழும நிர்வாக இயக்குனருமான எஸ்.வாசுதேவன், அணியின் ஸ்பான்சர்களில் ஒருவரான பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சி.சக்திகுமார், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கே.வைத்யநாதன், அணியின் ஆலோசகரும், கஸ்டம்ஸ் துணை கமிஷனருமான தமிழ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியன் வாலிபால் லீக் போட்டிக்கான சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் வருமாறு:
நடராஜன் (கேப்டன்), கபில்தேவ், சிவபாலன், நவ்ஜித்சிங், மன்தீப்சிங், காமராஜ், கனகராஜ், ராகேஷ், கார்த்திகேயன், அன்சார், ரோகித், பிரபாகரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago