முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம்

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஞ்ஞானியாக இருந்த போதும் ரசவாதத்தை நம்பியவர் யார் தெரியுமா?

மனித அறிவியல் வரலாற்றில் ரசவாதம் என்பது ஒரு மிகப் பெரிய காலகட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இன்றைக்கு நவீன அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் தனிமங்கள் குறித்த அறிவு பொதுவாகவே பரவலாக்கப்பட்டு விட்டது. ஆனால் கடந்த காலத்தில் சில விஞ்ஞானிகள் கூட ரசவாதத்தை நம்பினர் என்றால் ஆச்சரியம் தானே...ரச வாதம் என்பது எந்த தனிமத்தையும் தங்கமாக மாற்றுவது என்பதுதான் அது. அப்படி நம்பிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர் ஐசக் நியூட்டன் என்றால் நம்ப முடிகிறதா..சர் ஐசக் நியூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் இயற்பியலில் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஆனால் இது ரசவாதத்தை நம்புவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, இது இப்போது புராணங்களின் அடிப்படையில் ஒரு போலி அறிவியலாக கருதப்படுகிறது. தனது நாட்களின் இறுதி வரை, நியூட்டன் ஒரு நாள் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்.

வான் கோழிகள் ஒரு காலத்தில் கடவுளாக வணங்கப்பட்டன

அமெரிக்காவின் பிரபலமான உணவு வகைகளில் வான்கோழி இறைச்சியும் ஒன்றாகும். ஆனால் இன்றைக்காக வளர்க்கப்படும் வான்கோழிகள் ஒரு காலத்தில் தெய்வீக அம்சம் கொண்டவகையாக வணங்கப்பட்டு வந்துள்ள. கிமு 300 களில் மயன் நாகரிக மனிதர்கள் தான் வான்கோழியை வணங்கி வந்துள்ளனர். அவர்களின் முக்கிய மத சடங்குகளில் வான்கோழி பிரதான பங்கு வகித்து வந்துள்ளன. மயன் நாகரிகத்தில் ஆற்றல் மற்றும் பெருமையின் அடையாளமாக விளங்கின. அவர்களின் பல்வேறு தொல் எச்சங்களிலும் வான்கோழிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன என ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago