முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

ஒருநாள் போதும்

வீடுகட்ட ஒரேயொரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது. கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன. 4 அறைகள் கொண்ட வீட்டினை கட்ட சுமார் 6.77 லட்சம் ரூபாய்தான் செலவாம். இந்த வீடுகள் அனைத்து தட்பவெப்ப நிலையில் தாங்கும். மேலும் 175 ஆண்டுகள் வரை இருக்குமாம்.

இருமல், சளிக்கு ...

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு 2 வேளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவர, இளைப்பு நோய் குணமாகும்.

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

கேஸ் அடுப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? / விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.

மைக்ரோசாப்ட் முடிவு

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு பதில் பெயிண்ட் 3டி அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago