முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

துணிவே துணை

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த லிசா பிலேயர் என்ற பெண் தன்னம் தனியாக, ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன், 102 நாட்களில் பயணம் செய்த்ததே சாதனையாக இருந்தது.

வாடகைக்கு ரோபோ

ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.

நிலவின் வயது 451 கோடி ஆண்டுகள்

சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்நூக்கர் விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது தெரியுமா?

இன்றைக்கு செல்வந்தர்களின் விளையாட்டாக உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஸ்நூக்கரும் ஒன்று. ஆனால் ஸ்நூக்கர் எங்கு தோன்றியது தெரியுமா... அது இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது ஆங்கிலேயர்களின் பில்லியர்ஸ் விளையாட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டது. இது இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள் பந்துகளை மேஜையில் வைத்து விளையாடப்படும் விளையாட்டாகும். இருந்த போதிலும் தரையில் பந்துகளை வைத்து, பிளாஸ்டிக் அல்லது மர மட்டைகளால் அவற்றை அடித்து சென்று வளையங்களுக்குள் நுழைய செய்யும் க்ரோக்கெட் என்ற விளையாட்டிலிருந்துதான் ஸ்நூக்கர் வடிவம் பெற்றது. தரையில் விளையாடுவதை போலவே வண்ண பந்துகளை மேஜை குழியில் தள்ளுவதை இது அடிப்படையாக கொண்டுள்ளது.

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானின் தினசரி ‘மெனு’

அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் படைக்கப்படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சாத்துபடி. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியமாக புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை படைக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.இத்துடன் ஏழுமலையானின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யினால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago