காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி

31 siva news

காரைக்குடி :- தமிழக அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி “லஞ்ச ஒழிப்புவிழிப்புணர்வு வாரம்" 30.10.2017 முதல் 4.11.2017 வரை அனுசரிக்கப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில்  நேற்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தலைமையில் “லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி” எடுத்துக் கொள்ளப்பட்டது.
 துணைவேந்தர் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன்; உடன் இருந்தார்.
மேலும், அழகப்பாபல்கலைக்கழகத்துறைகள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் அந்தந்த துறைத் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து