தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் சிவகங்கை கலெக்டர் லதா ஆய்வு

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      சிவகங்கை
5 siva news

சிவகங்கை ,-சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், திருவேகம்பத்தூர் ஊராட்சியில் சுக்கரப்பட்டி கண்மாயில் தாய் திட்டம் (ஐஐ)  கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறும், அதனைத் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்தெடுக்கும் இடத்தை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் தூய்மைக் காவலர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
          மேலும், பனங்குளம் கிராமத்தில் தனிநபர் கழிவறைகள் கட்டப்படுவதை பார்வையிட்டு, அந்தக் கிராமத்தில் அனைவரும் தனிநபர் கழிப்பறை கட்டி இருப்பது குறித்து கிராமப் பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினார். பின்னர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறும், குடிநீர் பிரச்சனை சீராக இருக்குமாறும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரித்து பிளாஸ்டிக் இல்லாத சிவகங்கை மாவட்டமாக விளங்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.
         அதன் தொடர்ச்சியாக, இராம்நகர் - எழுவன்கோட்டை ரோட்டில் 3.8 கி.மீ. அளவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலையினைப் பார்வையிட்டு, சாலையில் புருவங்களைப் பலப்படுத்துமாறும், சருகனி பேருந்து நிறுத்தத்தில் பேவர் பிளாக் போடப்பட்டிருப்பதையும், சருகனி - தேவகோட்டை சாலை காவல் சோதனைச் சாவடி அருகில் விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகiளையும், தடுப்புச்சுவர் கட்டுமாறும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
          இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்டப் பொறியாளர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், பொறியாளர் சுந்தரராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து