நாகர்கோவில் நீதிமன்றத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நீதிபதி கருப்பையா தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
general medical camp in nagarcoil court

நாகர்கோவில் நீதிமன்றத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட நீதிபதி கருப்பையா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

குமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம், வழக்கறிஞர்கள் எழுத்தர் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வக்கீல்களுக்கான இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர். இம்முகாம் வக்கீல்கள் சங்கத் தலைவர் மகேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட நீதிபதி கருப்பையா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் கண் பரிசோதனை, இருதய பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, எலும்பு, தோல், காது, மூக்கு, தொண்டை மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் நடந்தன. 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இதில் கலந்து கொண்டன. நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி. ஜாண் ஆர்.டி.சந்தோசம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், முதன்மை சார்பு நீதிபதி ஜெமி ரத்னபாய் மற்றும் சார்பு நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து