நாதெள்ளா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
jewel 2017 11 20

சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து