20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      அரசியல்
Mohammad Mahmood Ali-Home Ministr-Telangana

ஐதராபாத், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், 20 ஆண்டுகளாக தன்னுடன் இருந்து வரும் முகம்மது மமூது அலிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பை வழங்கி உள்ளார்.

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட சந்திரசேகர ராவுடன், முகம்மது மமூது அலி மட்டுமே அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா தனி மாநில போராட்டம் துவங்கியது முதல் சந்திரசேகர ராவுடன் இருப்பது முகம்மது. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகரராவ் முதல்வரான பிறகு முகம்மதிற்கு வருவாய் துறை அமைச்சக பொறுப்பும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. மற்றொரு துணை முதல்வராக தலித் இன தலைவரான கடியம் ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டார். எத்தனையோ பேர் கட்சியில் இருந்தாலும் முகம்மது மீது சந்திரசேகர ராவிற்கு இருக்கும் தனி பாசத்திற்கு காரணம், அவர் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தான் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து