தீண்டாமையின் தீமைகளை விளக்கி ஒவ்வொருவரும் மனிதநேயமிக்கவர்களாக திகழ வேண்டும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      சிவகங்கை
 1 Manitha neya weekly day function photo

  சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மனிதநேய வார நிறைவு விழா நடைறெ;றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார்.  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,
         மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர் அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலக்கட்டங்களிலிருந்து மனிதநேய முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதை உறுதிப்படுத்தும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசத்தந்தை மகாத்மாகாந்தியடிகளின் நினைவு தினத்தில் மனிதநேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் பல இனங்களாக பிரிந்து வாழ்ந்த வந்த நிலையில் அவர்கள் பாகுபாடு மறந்து ஒருநிலையாக ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற நோக்குடன் மனிதநேயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் மனிதநேயம் மிக முக்கியமானதாகும். அதை எல்லோரும் சரியாக கடைப்பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை உணர்ந்து பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே முழுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மனிதநேயத்தை உறுதிப்படுத்தி தீண்டாமையை அகற்றி எல்லோரும் நல்லிணக்கதுடன் வாழவேண்டும் என நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார்.
        பின்னர் திருப்பத்தூர் வட்டம், கீழையப்பட்டி கிராமத்தில் 1962-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 21 குடும்பங்கள்  விலையில்லா வீட்டுமனைப் பட்டா கேட்டு அதற்காக தியாகி கக்கன் அவர்கள் தலைமையில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அரசிற்கு வழங்கி வந்தநிலையில் 57 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்த குடும்பங்களின் வாரிசுதாரர்கள் 21 குடும்பங்களுக்கு மாண்புமிகு கதர் மற்றும் கிராமத்
தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கினார். கீழையப்பட்டி கிராம ஆதிதிராவிடர் நல பொதுமக்கள் அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்தார். பின்னர் வருவாய்த்துறையின் மூலம் 8 வாரிசுதாரர்களுக்கு பணிநியமண ஆணைகளையும், சமூகநலத்துறையின் மூலம் 50 முதியவர்களுக்கு போர்வையினையும் வழங்கி மனிதநேய விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
       தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
       இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சக்திவேல், தனி வட்டாட்சியர்கள் (ஆதிதிராவிடர் நலம்) ஆனந்த், காஜா முகமது, சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்சிவன், மல்லல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம், அதிகரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை (பொ) விமிலி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் ஆதினம், புரட்சித்தம்பி, விடுதிக் காப்பாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து