ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்;தார்

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019      சிவகங்கை
27 sivagangai news

சிவகங்கை- சிவகங்கையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அம்மா அரசின் ஈராண்டு  சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஈராண்டு  சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
           இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொண்டு சென்றனர்.
          அதனைத் தொடர்ந்து, அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் திரையிடப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஈராண்டு சாதனை விளக்க செய்தி மலரை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
           இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சிவகங்கை வட்டாட்சியர் ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கருப்பணராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து