திருப்பதி கோவிலில் வரும் 16-ந்தேதி தெப்பத்திருவிழா

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      ஆன்மிகம்
tirupathi 2018 8 12

திருமலை : திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பக்குளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது.

திருமலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னமய பவனத்தில் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கினார்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரி ஹில்ஸ் என்ற இடத்தில் வெங்கடாசலபதிக்கும், மகா கணபதிக்கும் ரூ.28 கோடி செலவில் புதிதாக கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான விக்ரக பிரதிஷ்டை வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏப்ரல் 18-ந்தேதி சீதா, ராமர் கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது. திருமலையில் புதிதாக ரூ.97 கோடியில் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சேவை புரியும் 2 ஆயிரம் சேவகர்கள் ஓய்வு பெற வசதியாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில்களில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச் 5 மற்றும் 12-ந்தேதிகளில் ஊனமுற்றோர், முதியோர்கள், மார்ச் 6 மற்றும் 16-ந்தேதி 5 வயது குழந்தைகள் தங்களது தாய், தந்தையருடன் காலை 9 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் பக்தர்கள் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.82 கோடியே 77 லட்சமும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81 கோடியே 13 லட்சமும் வருமானமாக கிடைத்துள்ளன இவ்வாறு அவர் கூறினார்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து