Idhayam Matrimony

மத்திய அரசில் நிலுவையில் உள்ள நிதிகளை தமிழகத்திற்கு விடுவிக்க பார்லி.யில் ரவீந்திநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மத்திய அரசில் நிலுவையில் உள்ள நிதிகளை தமிழகத்திற்கு விடுவிக்க பாராளுமன்றத்தில்  அ.தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் ரவீந்தரநாத்குமார் வலியுறத்தி பேசினார்.

மக்களவையில், நிதித் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ரவீந்திரநாத் குமார் பேசியதாவது,

நிதி மசோதாவினை ஆதரித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நிலைத்த ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிலைமையையும், நிதி சீர்திருத்தங்களையும் குறிக்கோளாக கொண்டு,  தேவையான திருத்தங்களை மத்திய  நிதியமைச்சர் முன்மொழிந்திருக்கிறார். உலக நாடுகளில், குறிப்பாக ஆசிய துணை கண்டத்திலேயே பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றுவதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், நிதியமைச்சருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புறநானூற்றுக் காப்பியத்தில் பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் வழங்கிய அறிவுரைகளை மேற்கோள் காட்டி வரி விதிப்பு முன்மொழிவுகளை நிதியமைச்சர் தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறேன். இந்த நிதி மசோதாவில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகளும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருமான வரி, மத்திய கலால் வரி உள்ளிட்ட மத்திய வரிகளுக்கு அடிக்கடி செஸ் மற்றும் மேல்வரி விதித்து வருவது குறித்து தமிழக அரசு தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்கத்திலிருந்தே சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் தமிழ்நாட்டின் பங்கு 7.4 சதவீதமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருடாந்திர மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி) வசூல் 2016-17ல் 34442 கோடி, 2017-18-ல் 37897 கோடி மற்றும் 2018-19 -ல் 45490 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.  மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தனிநபர் வருமான வரி வசூலில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. ஆகவே சரக்கு மற்றும் சேவை வரி, மாநிலத்தில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு திட்டங்கள் போன்றவற்றுற்கான நிதிகளில் தமிழக அரசிற்கு சேர வேண்டிய பங்குகளின் நிலுவை குறித்த எனது கவலையை தெரிவித்து, நிலுவையில் உள்ள மத்திய அரசு நிதிகளில் தமிழக அரசுக்கு விடுவிக்கும்படியும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தமிழகம் அதிக அளவில் பங்களிப்பதற்கு ஊக்கப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து