முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் இங்கிலாந்து ராணியின் கேலி சித்திரங்கள்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்தை சாடும் விதமாக தலைநகர் டெக்ரானில் உள்ள கலாசார மையத்தில் ராணி கடற்கொள்ளைக்காரர் (பைரேட்ஸ் ஆப் தி ராணி) என்ற தலைப்பில் கேலி சித்திரங்களுக்கான கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மக்கள் இந்த காண்காட்சிக்கு வந்து கேலி சித்திரங்களை பார்த்து ரசித்து செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து