முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு வீரர் ஒருவர், தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்தாக புகார் எழுந்துள்ளது. இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது.

விண்வெளியில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், அங்கு தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மெக்லைன் என்பவரும் இந்த குழுவில் இடம் பெற்று விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அவர் ஆய்வை முடித்துக் கொண்டு ஜூன் மாதம் திரும்பினார். அவரது முன்னாள் வாழ்க்கை துணையான சம்மர் வொர்டன். விண்வெளியில் இருந்தபடி தனது வங்கி கணக்கை இயக்கியதாகவும், பணத்தை திருடியதாகவும் மெக்லைன் மீது சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார். அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் இந்த புகாரை அளித்துள்ளார். இருவரும் கடந்த கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர், 2018 -ம் ஆண்டு இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் மெக்லைன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு தனது பணத்தை திருடியுள்ளதாக சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார். இதுபற்றி மெக்லைனிடம் விசாரணை நடைபெற்றது. விண்ணில் இருந்து வங்கிக் கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தாக அவர் மெக்லைன் கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் விண்வெளியில் இருந்தவாறு முதல் குற்றம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து