முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.  

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.

அங்கு அவரை வரவேற்க இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதிலிருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து கொண்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இது நெட்டிசன்களிடையே பிரதமர் மோடியை உயர்வாக எண்ணும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

இதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விடக்கூடாது என்ற நம்பிக்கையிலா? அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா? என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனே பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தது அவரது எளிமையை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த செயல், அவர் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் பற்றி பொருட்படுத்துபவர் இல்லை. மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பவர் என்பதையே காட்டுகிறது என மற்றொருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் எளிமைக்கு நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து