முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகர் ராதாரவி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரபல நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி, ஆரம்பத்தில் தி.மு.க.வில் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டார். பின்பு பல்வேறு காரணங்களால் 2000-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த 2002-ம் ஆண்டு, சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ராதாரவி வெற்றி பெற்றார். ஆனால், அடுத்ததாக, 2006 சட்டப்பேரவை தேர்தலில் ராதாரவி போட்டியிட அ.தி.மு.க. வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு, அ.தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் தான், நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் எழுந்த கண்டனத்தை அடுத்து ராதாரவி தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராதாரவி, நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழகம் வந்துள்ள பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பு அக்கட்சியில் ராதாரவி இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து