மழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
minister sengottaiyan 2019 05 09

சென்னை : சென்னையில் பெய்து வரும் மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித்து துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டியில் ஒரு கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2021 ஆண்டு மட்டுமல்லாமல், நூற்றாண்டுக் காலம் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து