முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : இந்தியாவிற்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இயன் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடு வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்துவது, அதற்கே பாதகமாக அமைந்து விடும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில், இந்திய அணி 2020-21-ல் ஆஸ்திரேலியா வரும்போது இரண்டு போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. எனினும், தந்திரம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. தற்போது இந்திய அணி வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. விராட் கோலி உலகின் சிறந்த கேப்டன் என்பதை காண்பித்து வருகிறார். இதனால் தந்திரம் தங்கள் பக்கமே திரும்பி பாதகமாக வாய்ப்புள்ளது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து