38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      உலகம்
Chilean plane missing 2019 12 10

சாண்டியா : சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமானது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 38 பேர் பயணம் செய்தனர்.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சி-130 ஹெர்குலஸ் வகையை சேர்ந்த இந்த ராணுவ விமானத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இது குறித்து சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா கூறும் போது, ராணுவ விமானம் மாயமான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து