முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்புகளிடம் இருந்து பரவிய கரோனா வைரஸ் - சீன விஞ்ஞானிகள் தகவல்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சீனாவில் உள்ள ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் இன்று புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் அந்த நாட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது இந்த கரோனா வைரஸ். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். 550-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து சீனாவில் வீ ஜி நகரில் உள்ள பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். வீட்டு விலங்குகள் மொத்தமாக விற்பனை செய்யும் மொத்தச் சந்தைகள், கடல் உணவுகள் விற்பனை நிலையங்கள், கோழிகள், பாம்புகள், வவ்வால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்பனை செய்யும் இடங்களில் இருந்து வைரஸ் பரவி இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலாஜியில் குறிப்பிடுகையில்,

சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலேயே வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கி விட்டது. இப்போது சீனா மட்டுமல்லாது, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளிலும் பரவியுள்ளது. பல்வேறு விதமான வாழிடங்களில் இருக்கும் கரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வவ்வால்களில் இருந்து வந்தவை என்றும் மற்றொரு அறிந்து கொள்ள முடியாத இடத்திலிருந்து வந்தவை என்றும் ஆய்வில் தெரிகிறது. இந்த வைரஸின் தன்மையை உறுதியாகத் தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அந்த வைரஸின் மூலக்கூறுகள் குறுக்கும் நெடுக்கமாக இருப்பதால் இதைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து