முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துதெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தைசேர்ந்தவர்களுக்கு முதல்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசனின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்த செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  அதே போன்று, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து அவருக்கும் மத்திய அரசு உயரிய விருதான  பத்ம பூஷன் விருது  அறிவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கலைத்துறையில் சிறந்து விளங்கும்  கர்நாடக இசைப் பாடகர்கள் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, சென்னை ஆகிய பெரும் நகரங்களின் வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும் மனோகர் தேவதாசுக்கு பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணனின் சமூக சேவையினை பாராட்டி அவருக்கு மத்திய அரசு  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வரும் காலீ ஷாபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பிரதீப் தலப்பில்  விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினை பெறும்  வேணு சீனிவாசன் மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்; பத்மஸ்ரீ விருதினை பெறும்  லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன்,  காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் மென்மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து