கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      இந்தியா
arvindkejriwal 2020 02 11

டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

டெல்லி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகியவை பின்தங்கின. பா.ஜ.க 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்காமல் படுதோல்வி அடைந்தது.  இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நாளை  (பிப்ரவரி 16) நடைபெற உள்ளது.

இந்நிலையில், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து