ஒட்டன்சத்திரம் பகுதிகளில் காகிதப்பூக்கள் சினிமா படப்பிடிப்பு

4 kaketha pukkal cinemw

ஒட்டன்சத்திரம் -.ஒட்டன்சத்திரம் பகுதியில் முக்கோண காதல் கதை கொண்ட திரைப்படம் புதுமுக இயக்குனர் மற்றும் நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட முக்கோண காதல் கதை |" காகித பூக்கள் "புதுமுகங்களுடன் புதிய இயக்குனருடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் இப்படத்திற்கு " காகித பூக்கள் " என பெயரிட்டுள்ளனர். புதுமுகங்கள் லோகன் - பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இதில் மேலும் தில்லைமணி, தவசி , பாலு, ரேகாசுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர்.
 இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத்தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலையையும், ஸ்ரீ சிவசங்கர் - ஸ்ரீ செல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
 திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார் முத்துமாணிக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து