அடுத்த சில நாட்களில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
World-Health-Organization 2020 04 02

அடுத்த சில நாட்களில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:-

உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த ஐந்து வாரங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. அடுத்த சில நாட்களில் உலகளவில் 10 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் 50,000 இறப்புகளையும் நாங்கள் அடைவோம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து