தனி மாவட்டமாக மயிலாடுதுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      தமிழகம்
TN assembly 2020 04-07

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து