முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்பட்டது.

நேற்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.  மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.   இதையடுத்து ஏழை, எளியவர்களுக்கு மாமிசங்களை பங்கிட்டு கொடுத்து, உற்சாகமாக பக்ரீத் கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-  

பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். ஒரு நியாயமான, இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் ஆவி வளர்க்கப்படட்டும். ஈத் முபாரக் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து