எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Yeddyurappa 2020 08 03

Source: provided

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.  கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வந்தார். 

இதற்கிடையே, முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.  

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து