எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மகாத்மா காந்திக்கு அர்ப்பணம் செய்யப்படும் வகையிலான இந்த மையம் குறித்து காந்தியடிகளின் சம்பரன் சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் போது, 10 ஏப்ரல் 2017 அன்று, பிரதமர் முதன்முதலாக அறிவித்திருந்தார். மக்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும், உலகிலேயே மிகப்பெரிய இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிகரமான பயணம் குறித்து இனி வரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மையங்கள் செயல்படும்.
இந்த மையங்களில் தூய்மை பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு, கல்வி, இதர தொடர்புடைய அம்சங்கள் குறித்து டிஜிட்டல் முறையிலான தகவல்களும், இதர வகையிலான தகவல்களும் இடம் பெறும். கலந்துரையாடும் வகையில், முக்கிய செய்திகளும், வெற்றிக் கட்டுரைகளும், சிறந்த நடைமுறைகளும் உலக அளவிலான தரங்களும் பற்றிய முழுமையான கற்றல் முறை மூலம் பல்வேறு செயல்பாடுகளும், முறைகளும் கொண்ட கல்வி அனுபவமாக இம்மையம் செயல்படும்.
முதலாவது கூடத்தில் 360 டிகிரி காணொலிக் காட்சி மூலம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கை மாற்ற இயக்கமான தூய்மை இந்தியா இயக்கம் குறித்து, அரங்கிற்கு வருபவர்கள் அனுபவித்து உணரலாம். இரண்டாவது கூடத்தில் எல்.இ.டி. பேனல்கள், ஹோலோகிராம் பெட்டிகள், விளையாட்டுகள் மூலமாக தூய்மை இந்தியா குறித்து காந்தி கண்ட கனவை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த மையத்திற்கு அருகே திறந்த வெளி அரங்கில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் படங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி தூய்மைக்கான போராட்டம் வரையிலான, இந்தியாவின் பயணத்தில் பல நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும். தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் பற்றி, இந்த மையத்தின் சுவர்களில் சுவர் ஓவியங்களும், கலைச் சிற்பங்களும் அழகுற எடுத்துக் கூறும்.
இம்மையத்தை சுற்றிப் பார்த்த பிறகு பிரதமர், முப்பத்தாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக டெல்லியைச் சேர்ந்த 36 பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவார். திறந்தவெளிக் கலையரங்கில், சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தக் கலந்துரையாடல் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு உரையாற்றுவார்.
இந்தியாவில் கிராமப்புற சுகாதாரத்தில், தூய்மை இந்தியா இயக்கம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து இதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மற்ற நாடுகள் பின்பற்றும் அளவிற்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. திறந்த வெளியை கழிப்பறையாக உபயோகிக்காத இந்திய கிராமங்கள் (ஓ.டி.எப்) என்ற தற்போதைய நிலையிலிருந்து, திறந்தவெளியை கழிப்பறையாக ஒருபோதும் பயன்படுத்தாத கிராமங்கள் (ஓ.டி.எப் ப்ளஸ்) என்ற நிலைக்கு எடுத்துச் செல்வதும், திடக்கழிவு நீர் கழிவு மேலாண்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
23 Jul 2025ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது.
-
புதிய துணை ஜனாதிபதி தேர்வு: தேர்தல் பணியை துவங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
23 Jul 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை, முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Jul 2025ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக்கோரி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக தொடர் அமளி : இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
23 Jul 2025புதுடெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக நேற்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
-
பல சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத்
23 Jul 2025லண்டன் : இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
வரலாற்றுச் சாதனை...
-
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டால
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? - மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை : முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
இங்கி., எதிரான 4-வது டெஸ்ட் : சாதனைகள் படைக்க பும்ராவுக்கு வாய்ப்பு
23 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: ரஸலுக்கு சக வீரர்கள் கவுரவம்
23 Jul 2025கிங்ஸ்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளி
-
நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jul 2025சென்னை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வு அட்டவணைகள் ஒருவாரத்தில் வெளியடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
23 Jul 2025திருச்சி : பள்ளி பொதுத்தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறியது குறித்து ராகுல்காந்தி கேள்வி
23 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.
-
இங்கிலாந்தில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் கே.எல்.ராகுல்
23 Jul 2025லண்டன் : இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான நேற்று கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில்
-
தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டம்
23 Jul 2025சென்னை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி, 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
24 Jul 2025சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்ப
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
இந்தியா பிரிட்டன் இடையேயான ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ரஷ்யா: பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 50 பேர் பலி
24 Jul 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித
-
இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.