மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Saravanan 2020 08 01

Source: provided

சென்னை : மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் முன்கள பணியாளர்களான மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள், போலீசார் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதே போல் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்கள். இதே போல் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ.வும் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சரவணன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து