போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம்: பெங்களூரில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      சினிமா
Sanjana-Kalrani 2020 09 0

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரத்திற்கு பின்னர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பெங்களூருவில் இந்திரா நகர் பகுதியில் உள்ள சஞ்சனா கல்ராணியின் வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் முறைப்படி அனுமதிபெற்ற பிறகே இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது.

அதாவது கன்னட திரையுலகில் அதிகளவில் நடிகை, நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், போதைப்பொருள் கும்பலுடன் அவர்கள் நெருக்கிய தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டானது எழுந்த வண்ணமே இருந்தது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னணி நடிகையான ராகினி நிவேதினி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகை சஞ்சனா கல்ராணியும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சோதனையானது நடைபெற்றது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையில், சஞ்சனா வீட்டிலிருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல பொருட்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையகப்படுத்தினர். மேலும், ஏற்கனவே சஞ்சனாவின் நெருக்கிய நண்பரான ராகுல் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் அவர்களிடமிருந்தும் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து 4 மணி நேர சோதனைக்கு பின்னர் சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து