முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 17 கோடியில் மதுரை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19.9.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வழங்கி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளில்  நிலத்தடி நீரை செறிவூட்ட வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் பிரதான கால்வாயின் 1-வது கிளைக் கால்வாயினை புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், சீவலப்பேரி குளத்தின் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும்,  மக்களின் குடிநீர் தேவைகளைப்  பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத்  திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

தமிழக முதல்வர் தலைமையில் 7.3.2018 அன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டின் போது, வைகை ஆற்றின் குறுக்கே மாடக்குளத்தில் படுகை அணை கட்டப்படும் என்று அறிவித்தார். 

அதன்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வழங்கி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்ட வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இத்தடுப்பணை கட்டப்படுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய் மற்றும் துவரிமான் கண்மாய் ஆகிய கண்மாய்களில், அதன் மொத்த கொள்ளளவான 215.89 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிப்பது உறுதி செய்யப்படுவதோடு, 3360.13 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  இத்திட்டத்தினால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 

மேலும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் 1-வது கிளைக் கால்வாயை 6 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சீவலப்பேரி குளத்தைச் சுற்றி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி என மொத்தம் 24 கோடியே 93  லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். 

பொதுப்பணித் துறையில் 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான 148 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் நேற்று 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.    

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர்  சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து