உ.பி.யில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பைலட் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Training-aircraft 2020 09 2

Source: provided

அமேதி : உத்தர பிரதேசத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி ஒருவர் உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் இந்திரா காந்தி ராஷ்டிரிய யுரான் அகாடமி என்ற பெயரில் மத்திய அரசின் விமான பயிற்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து ஒரு பயிற்சி விமானி, டிபி-20 ரக சிறிய விமானத்தில் நேற்று காலை பயிற்சி மேற்கொண்டார். 

அந்த பயிற்சி விமானம் ஆசம்கர் மாவட்ட வான்பரப்பில் பறந்த போது, திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. தரையை நோக்கி பாய்ந்த விமானம், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த பயிற்சி விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து